Thursday, October 8, 2009

அறிமுகம் அலாரவல்லி

அனைவருக்கும் வணக்கம்.

பதிவுலகில் ஜாம்பவான்கள் மத்தியில் அலாரவல்லியான
நான் மழலையாக கலந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
என்னடா இது வித்தியாசமான பெயராக நீங்கள் நினைக்கலாம்.
எனது தங்கை எதை எடுத்தாலும் போடாமல் -கீழே தள்ளாமல்
இருக்கமாட்டாள். அலாரம்+வல்லி.எனது அம்மா அவளை
அலாரவல்லி என்றே அழைப்பார்கள் வித்தியசமாக இருக்கட்டுமே
என நான் இந்த பெயரை வைத்துக்கொண்டுள்ளேன்.
சரி பதிவு எதைப்பற்றி....எனக்கு தெரிந்த அனைத்தையும்
பதிவிடுகின்றேன்.

உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டி....

அலார வல்லி.

இன்றைய பதிவு:-

ஒன்பதாம் வாய்ப்பாட்டை சுலபமாக எழுத:-

0 முதல் 9 வரை நேர்வரிசையில் எழுதிக்கொள்ளுங்கள்.

9 x 1 = 0
9 x 2 = 1
9 x 3 = 2
9 x 4 = 3
9 x 5 = 4
9 x 6 = 5
9 x 7 = 6
9 x 8 = 7
9 x 9 = 8
9 x 10 = 9

இப்போது கீழேயிருந்து 0 முதல் ஆரம்பித்து ஓவ்வொரு
எண்ணாக அதிகமாக்கிக்கொண்டு வாருங்கள்.

9 x 1 = 09
9 x 2 = 18
9 x 3 = 27
9 x 4 = 36
9 x 5 = 45
9 x 6 = 54
9 x 7 = 63
9 x 8 = 72
9 x 9 = 81
9 x 10 = 90

இந்த முறை எழுதுவதற்கு மட்டுமே பயன்படும்.

முயற்சி செய்து பாருங்கள்.

புதிய பதிவாளரான எனக்கு கருத்துக்களும்
ஒட்டுக்களையும் போட்டு ஊக்குவிக்கவும்.

நன்றி.

அலார வல்லி.
 
Copyright 2009 அலாரவல்லி. Powered by Blogger
Blogger Templates created by Deluxe Templates
Wordpress by Wpthemesfree