வது பார்வையாளராக வருகைதந்துள்ள
உங்களுக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
பணியின் காரணமாக நாம் அனைவரும் வெவ்வேறு
இடங்களில் இருக்கின்றோம். அதைப்போல் நமக்கு
வேண்டியவர்களும் வெவ்வேறு இடங்களில் உள்ளனர்.
அவ்வாறு இருப்பவர்களின் நாடுகளில் இப்போதைய
நேரம் என்ன - அவர்கள் இன்நேரம் பணியில் இருப்பார்களா -
உறங்கிக் கொண்டிருப்பார்களா - என இந்த கெடிகாரம்
மூலம் எளிதில் கண்டு கொள்ளலாம். இதை டவுண்லோடு
செய்து கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்ததும் நமக்கு
டாக்ஸ்பாரில் கடிகாரத்துடன் சிம்பள் வந்துவிடும்.
அதை கிளிக் செய்தால் உங்களுக்கு இந்த படம் வரும்.
கர்சரை உங்களுக்கு தேவைப்படும் நாட்டுக்கு எடுத்து சென்றால்
அந்த நாட்டுடைய பெயர் - அந்த நாட்டுடைய நேரம் -
நாள் -கிழமை எல்லாம் தெரியும்.இதன் கொள்ளளவு
240 கே.பி.தான். பாருங்கள். இதை பதிவிறக்க இங்கு
செல்லுங்கள். பதிவிறக்கம் செய்யும் முன் மறக்காமல் ஒட்டை
போடுங்கள்.
நன்றி
அலாரவல்லி.
8 comments:
வெளிநாட்டு டைம் எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். எனக்கு "டைம் சரியில்லை" என்று ஜோசியக்காரன் சொல்லி இருக்கான். அதுக்கு எதாவது பரிகாரம் இருக்கா?
//அதுக்கு எதாவது பரிகாரம் இருக்கா//
கீது !! ஐயோ !! அதுக்கா வயி இல்ல , நேரா போயி தல மொயிட்டு, மாரியாத்தவ வேண்டிக்கீனு ,
அப்பிடியே மணி கூண்டு கிட்ட போய் ஒக்கான்க்துக்கோ தலீவா !! உன்நேரம் எப்போ செரி ஆவும் இன்னு அதுல பாத்துக்கினே இரு !! ஓகே வா !!
//ஓகே வா !!//
ஓகே வரேன் ...
மணிகூண்டு, புகைகூண்டு,புலி கூண்டு அட... கிளி கூண்டு கிட்ட கூட போய் உக்காந்திருக்கேன் டவுசர் சார்...
எந்த கூண்டு கிட்ட போனாலும் கடைசில காண்டு ஆனதுதான் மிச்சம் .... !!! !!!
பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி.
நன்று.வாழ்க வளமுடன்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
புதுவை.காம்
வலைப்பூ புண்ணியத்தில் எனக்கு வெளிநாடுகளில் இருந்தேல்லாம் ஜாதகம் கணிக்கச் சொல்லி மின் அஞ்சல்கள் வருகின்றன.உங்களது இந்த வலைப்பூ எனக்கு முக்கிய உதவி செய்துள்ளது. மிக்க நன்றிகள்!!!www.aanmigakkadal.blogspot.com
Post a Comment