நீங்கள் துப்பறியும் நிபுணரா என சுய பரிசோதனை செய்ய
இரண்டு தகவல்களை இணைத்துள்ளேன். உங்கள் விடை
களை சொல்லுங்கள் பார்க்கலாம்.
1. 02.10.2009 வெள்ளிக்கிழமை.காலை 10.30 -12.00 .ராகுகாலம்
முடிந்த சிறிது நேரத்திற்கு எல்லாம் சென்னையில் (அசோக் நகர்
என்று வைத்து கொள்ளுங்களேன்)உள்ள ஒரு வீட்டில் இருக்கும்
நபர் கொலைசெய்யப்பட்டு உள்ளார்.போலீஸ் வருகின்றது.
முதலில் அவரின் மனைவியை விசாரிக்கின்றது.
நான் அந்த நேரம் . உறக்கிக்கொண்டிருந்தேன் என பதில்
அளிக்கின்றார்.
அடுதது அவரின் மகனை விசாரிக்கின்றார்.அவன் நான்
எனது நண்பனுடன் பக்கத்து மைதானத்தில் விளையாடிக்
கொண்டிருந்ததாக சொல்கின்றார்.
அடுத்து அவரின் மகளை விசாரிக்கின்றார். நான் அந்த
நேரம் கம்யூட்டரில் சாட்டிங்கில இருந்ததாக தெரிவிக்கின்றார்.
அடுத்து அவரின் வேலைகாரனை விசாரிக்கின்றார்.
அவர் ஓயின் ஷாப் போயிருந்ததாக சொல்கின்றார்.
அடுத்து அவரின் தோட்டக்காரனை விசாரிககின்றார்.
தோட்டக்காரர் காய்கறிகளை மார்க்கெட்டில் கொடுத்துவிட்டு
வர போயிருந்ததாக சொல்கின்றார்.
சமையல் காரரை விசாரிக்கின்றார். அவர் சமையல்
செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கின்றார்.
பக்கத்து வீட்டில் விசாரிக்கின்றார். அவர்கள் வெளியில்
ஷாப்பிங் சென்றதாக சொல்கின்றார்கள்.
அனைவரையும் விசாரித்த காவல் அதிகாரி இறுதியில்
கொலையாளியை கைது செய்கின்றார்....
அவர் யார்?.........
அடுத்த கேள்வி:-
ஒரு மாஜிஸ்ட்ரேட்...
.அவருடைய மகன் வக்கிலாக உள்ளார்.
வக்கிலின் தந்தை ஒரு போலீஸ் அதிகாரி.
அப்படியானால் மாஜிஸ்ட்ரேட்டுக்கு அந்த
போலீஸ் அதிகாரி என்ன வேண:டும்...
உங்களுக்கு தெரிந்த விடைகளை சொல்லுங்கள்.
நாளை இந்த நேரம் சரியான விடை சொல்கின்றேன்.
நன்றியுடன்,
அலாரவல்லி.
.
எனது முந்தைய பதிவான வெளிநாடுகளில் நேரத்தை அறிய
என்கின்ற பதிவை குட்பிளாக்ஸ் பதிவில் வெளியிட்ட
யூத்புல் விகடனுக்கு நன்றி...
என்கின்ற பதிவை குட்பிளாக்ஸ் பதிவில் வெளியிட்ட
யூத்புல் விகடனுக்கு நன்றி...
2 comments:
/*ஒரு மாஜிஸ்ட்ரேட்...
.அவருடைய மகன் வக்கிலாக உள்ளார்.
வக்கிலின் தந்தை ஒரு போலீஸ் அதிகாரி.
அப்படியானால் மாஜிஸ்ட்ரேட்டுக்கு அந்த
போலீஸ் அதிகாரி என்ன வேண:டும்...
*/
போலீஸ் அதிகாரி அந்த மாஜிஸ்ட்ரேட்டின் கணவர்.
முதல் புதிருக்கு விடை தெரியவில்லை.
இரண்டாவதுக்கு சரியான விடை முதல்விடை தனி மெயிலில்.
Post a Comment