Monday, December 28, 2009

நோக்கியாவும் ரகசிய குறியீடுகளும்.


web counter

நோக்கியாவும் ரகசிய குறியீடுகளும்.




E72
நோக்கியா போன்களுக்கான சில ரகசிய குறியீடுகள்
இங்கு உள்ளன. இதன் மூலம் சில பிரச்சனைகளை
நாம் எளிதில் கையாளலாம். அந்த ரகசிய குறியீடுகள்
என்ன என்ன என்பதை இப்போது காணலாம்.


# 06#      மொபைலின் தனி அடையாள எண்ணை அறிய
#43#      கால்வெயிட்டிங் குறித்து அறிந்து கொள்ள
#73#       போன் டைமரை மாற்றவும. விளையாடிக்கொண்டு
                இருக்கும் கேம்ஸில் பெற்ற மதிப்பெண்களை
                 புதிதாக செட் செய்திடவும் பயன்படும்.
#147#    நீங்கள் நோக்கியாவில் வோடபோன் சர்வீஸ்
              பயன்படுத்தினால் இறுதியாக பயன்படுத்திய போன்
              எண் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
#2640#  மொபைல் போனின் செக்யூரிட்டி கோட் அறியலாம்.
#2820#   புளு டூத் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
#3283#   உங்கள் மொபைல் தயாரிக்கப்பட்ட தேதியை அறிய
#7370#   உங்கள் மொபைல்போன்மெமரியை பார்மட் செய்திட
#7760#  உங்கள் மொபைல்போன் எண்ணின் தயாரிப்பு
               வரிசையை அறிய
#7780#  கம்யூட்டரில் ரீ-ஸ்டோர் செட்டிங்போன்று இதில்
               பழைய செட்டிங்கை மீண்டும் கொண்டு வரலாம்.
#67705646#  மொபைல் போன் ஆபரேட்டர் லோகோ தெரி
                        கின்றதை இந்த எண்கொண்டு மாற்றிவிடலாம்.
#746025625# சிம் மூலம் ஓடிக்கொண்டிருக்கின்ற 
                        கடிகாரத்தை  நிறுத்திவிடலாம்.
#92702689#  மொபைல் போனின் வாரண்டிகுறித்த தகவல்கள்
                        சீரியல் எண்-வாங்கிய நாள்-ரீப்பேர் செய்தநாள்-
                        ஒடியுள்ள லைப்டைம் ஆகியவைகளை அறிய
                       இந்த எண் பயன்படும்.
#7328748263373738#  போனில் பதிந்து தரப்பட்டுள்ள டிபால்ட்
                                        செக்யூரிட்டி கோட்டினை அறிய.
#DELSET#    ஜி.பி.ஆர்.எஸ் மற்றும் இ-மெயில் செட்டிங்ஸை 
                       அழிக்க
#PW+1234567890+1#  மொபைல் போன் லாக் செட்டிங்ஸ்
                                        நிலையை அறிந்துகொள்ள
#PW+1234567890+4#  உங்கள் சிம் கார்ட் லாக் நிலையை அறிய


பயன்படுத்துங்கள். ஓட்டுப்போடுங்கள். கருத்துக்களை
கூறுங்கள்.


அலாரவல்லி.

Thursday, December 24, 2009

கிருஸ்துமஸ் வாழ்த்து அனுப்ப


web counter


அனைவருக்கும் கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
இன்றைய வாழ்த்தை உங்களுக்க கடிதமாக இணைத்து
உள்ளேன். நீங்கள் உங்கள் வாழ்த்தை
இங்கு
பெற்றுக்கொள்ளுங்கள்.இது 470 கே.பி.அளவு.
கடிதம் வந்ததும் நீங்கள் இதில் உள்ள ஸ்டாம்ப் கிளிக்
செய்யுங்கள்.

இந்த படம் ஓப்பன் ஆகும். இதில் உள்ள புகைக்கூண்டை
கிளிக் செய்யவும்.

அதுசமயம் புகை வரும்.

இப்போது மரத்தின் கீழே கிளிக் செய்யவும்.

உங்களுக்கு மரம் வரும். கதவின் அருகில் மெழுகுவத்தி இருக்
கும். அதை கிளிக்செய்யவும்.
அதேப்போல் மேலே உள்ள ஸ்டார்அழுத்தவும். இப்போது
மெழுகுவத்தி எரிய ஆரம்பிக்கும்.
அடுத்து இப்போது கேட் அருகே அழுத்தவும்.இரண்டு நாய்கள்
மரத்தின் அருகில வரும்.

கடைசியாக வானத்தில் எதாவது ஒரு இடத்தில் கிளிக செய்யவும்.

வாழ்த்துமழை பொழியும்.


WISH YOU HAPPY CHRISTMAS


நன்றி 
அலாரவல்லி..

Wednesday, December 16, 2009

ஆபிஸில் போர்ட் மீட்டிங்

இன்று எனது பிறந்தநாள். அன்பர்கள் அனைவரது
வாழ்த்துக்களையும் வேண்டி......


அலாரவல்லி.




இன்றைய பதிவு:-




இன்று அலுவலக நடைமுறைபற்றிய


சாப்ட்வேர் இணைத்துள்ளேன்.அதை


பதிவிறக்ககிளிக் செய்யுங்கள்.


அவங்கவுங்க ஆபிஸில் என்னதான் 


பன்றாங்கன்னு தான் இங்க பாருங்களேன்.


இங்கு மீட்டிங்கிலே மேலே நிறைய


படங்கள் இருக்கு. அதில் உள்ள


ஒவ்வொன்றையும் கிளிக்செய்தால்


அந்த படத்தில் உள்ள பொருட்களை


வைத்து படத்தில் உள்ளவர்கள் 


செய்வார்கள்.

இப்போது பாருங்கள். இங்கு நாலாவது படத்தை நான்


கிளிக் செய்ததும் முதல் நபர் தூங்குகின்றார்.



ஒவ்வோரு ஆபிஸிலும் போர்ட் மீட்டிங்கில் இதுதான்


நடக்குதா?....




நன்றி..
அலாரவல்லி.

Sunday, December 13, 2009

கொட்டாவி ஏன் வருகின்றது?


web counter



கெட்டஆவி விட்டாலும் கொட்டாவி விடாது
 என்பது பழமொழி.அதாவது நாம் யாரவது
 கொட்டாவி விடுவதை பார்த்தால்
கண்டிப்பாக நாமும் அடுத்த சில நொடிகளில்
 கொட்டாவி விடுவோம். அது ஏன் ? 
                           
  முதலில் நாம் கொட்டாவி விடும்போது
 என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
 நாம் சுவாசிக்கும் போது oxygen னை 
உள்ளே இழுத்துக்கொண்டு lungs சில்
 இருந்து தேவையற்ற carbondioxide டை
 வெளியே விடுவோம்.இது இயற்கை.
 நமது உடல் சோர்வாக இருந்தாலோ
 அல்லது தூக்கத்தோடு இருந்தாலோ
 நாம் மெதுவாக சுவாசிப்போம்.அப்போது
 நம் உடலுக்கு அதிகமான oxygen  தேவைப்படும்.
 அதனால் நம்முடைய மூளை நம்மை
 அதிகமான oxygen னை எடுத்துக்கொள்ளும்படி
  தூண்டுகிறது. 


 இதனால் நாம் அதிகமான oxygen னை 
சுவாசிப்பதற்கு பெயர் தான் கொட்டாவி.
 நாம் அதிகமான oxygen னை 
இழுத்து carbondioxide டை முழுமையாக
 வெளியேற்றுவதற்கு பெயர் தான் கொட்டாவி.
கும்பலில் நாம் அமர்ந்திருக்கும்
சமயம் ஒருவருக்கு கொட்டாவி வந்தால்
அருகில் அமர்ந்திருக்கும் நமக்கும் கொட்டாவி
வரும். ஏன் என்றால் அந்த இடத்தில் முதலில்
கொட்டாவி விடுபவர்கள் ஆக்ஸிசனை 
எடுத்துக்கொள்வதால் அந்த இடத்தில் நமக்கு'
தேவையான ஆக்ஸிசன் குறைந்துவிடும்.
அதனால் நமக்கும் கொட்டாவிவரும்.
(சமயத்தில் இந்த பதிவு படிக்கும்போதே 
கொட்டாவி வரும் பாருங்கள். இது ஹயூமன்
சைக்காலஜி).
படித்து கொட்டாவி விட்டு செல்லாமல்
ஓட்டுப்போட்டுபோங்கள் சார்.....


நன்றியுடன்.


அலாரவல்லி.

Tuesday, December 8, 2009

மாணவர்கள் பார்வையில் கிரிக்கெட்






web counter





மாணவர்களின் கண்ணோட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை
இங்கு காணலாம்.


BATSMAN                                                -    STUDENT


BOWLER                                                   -    PAPER SETTER


UMPIRE                                                     -    AUR


SCORER                                                     -   PAPER VALUATOR


SCORE BOARD                                         -   MARK SHEET


PLAY GROUND                                         -  EXAMINATION HALL


FAST BALL                                                 -  LONG QUESTIONS


SPIN BALL                                                  -  SHORT QUESTIONS


BOUNCER BALL                                        -  QUESTION OUT OF SYLLABUS


LEG UMPIRE                                               -  HALL INVIGILATOR


THIRD UMPIRE                                           -  UNIVERSITY


WIDE BALL                                                  -  PRINTING MISTAKE


SIXER                                                            -  DISTINCTION


FOUR                                                             -  FIRST CLASS


LBW                                                               -  CAUGHT WHILE COPYING


CLEAR BOWLED                                          -  DEBARRED


RUN OUT                                                       -  DETAINED


OH ! IT'S NO BALL                                       -  PASSED IN REVALUATION


D/W LEWIS                                                    -  WITH HELD




உங்கள் மேலான கருத்துக்களையும் ஓட்டுக்களையும்
போட்டு ஆதரவு தாருங்கள்.....

நன்றி


அலாரவல்லி.




Sunday, November 29, 2009

உயில் எழுதுவது எப்படி ?


web counter

உயில் எழுதுவது எப்படி ?
மனிதனாக பிறந்த ஒவ்வொருவனுக்கும் இறப்பு உறுதி.
அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் ஒரு நாள்
இறந்துதான் ஆகவேண்டும். நீங்கள்
இன்ஸ்சுரன்ஸ் எடுத்து வைத்து இருக்கலாம். அதன்மூலம்
நமக்கு பின் நமது குடும்பத்தார்க்கு பணம் கிடைக்கும்.
அதுபோல்நாம் சேர்த்த பணம்-அசையும் சொத்து-
அசையா சொத்து ஆகியவற்றையும் நாம் விரும்பியவர்க்கு
- நம்மை விரும்பியவர்களுக்கு
உயில் எழுதிவைத்துவிட்டால் பிரச்சனையில்லை.
உயில் என்பதை மரண சாசனம் என்றும், இறப்புறுதி
ஆவணம் என்றும் சொல்வார்கள் .யார் வேண்டு
மானாலும் உயில் எழுதலாம்.உயில் பதிவு செய்யப்பட
வேண்டும் என்பது கட்டாயமல்ல .
பதிவு செய்யாமலும் உயில் பிறப்பிக்கபடலாம்.
உயில் பத்திரத்தில்( முத்திரை தாளில் ) எழுத
வேண்டியதில்லை .வெள்ளை தாளிலும் எழுதலாம் .
இதை உயில் எழுதுபவர் தன்னிடமோ அல்லது
தனது குடும்பத்தினரிடமோ அல்லது நண்பரிடமோ
கொடுத்து வைக்கலாம் .ரகசியமாக இருக்க வேண்டும்
என்று நினைத்தாள் பத்திரப்பதிவு அலுவலகத்தில்
பாதுகாப்பாக வைத்திருக்க கட்டணம் செலுத்தி
பதிவு செய்யலாம் .
உயில் ஒரு பக்கத்திற்கு மேல் எழுதி
இருந்தால் உயிலை எழுதியவர் ஒவ்வொரு
பக்கத்திலும் கையெழுத்து போட வேண்டும்.
அல்லது கைரேகை வைக்க வேண்டும். உயில்
எழுதியவர் உயிலில் கையெழுத்து போடும்
பொழுது இரண்டு சாட்சிகளாவது இருக்க வேண்டும்.
இரண்டு சாட்சிகளும் சாட்சிக் கையெழுத்து போட
வேண்டும். ஒரு உயிலில் சாட்சியாக கையெழுத்து
போடுபவருக்கு அந்த உயிலின் மூலம் சொத்து
கிடைக்கும் என்று எழுதியிருந்தால் அந்த சாட்சிக்கு
அந்த சொத்து கிடைக்காது.
உயில் எழுதுபவரின் உடைமைகளைபற்றி
மட்டுமே உயில் எழுத முடியும்.உயிலில்
எழுதப்படும் சொத்து உயில் எழுதுபவரின்
உரிமையாக இருக்க வேண்டும்.
உயில் எழுதுபவர் தனது ஆயுள் காலத்தில் ,
அந்த உயிலை ரத்து செய்து விடலாம்.,அல்லது
அந்த உயிலை மாற்றி அமைக்கலாம்.
உயில் நாம் எழுதினாலும் நமது உயிர் சென்றபின்னர்தான்
அந்த உயிலுக்கு உயிர் வரும்.
தவறாக எழுதப்பட்ட உயில் என்றோ - வற்புறுத்தி எழுதபபட்ட
உயில் என்றோ - உயிலில் இருப்பது கள்ளக் கையெழுத்து
என்றோ -உயில் எழுதியவர் உயில் எழுதிய காலத்தில்
மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றாலோ - அந்த உயிலை
எதிர்த்து நீதிமன்றத்தில் வழுக்கு போடமுடியும்.
நானே அன்றாடம் காய்ச்சி - எனக்கு ஏது சொத்து -
என்கின்றீர்களா...நாளையே உங்களுக்கு சொத்து
சேரும் சமயம் இது உதவலாம்....

Friday, November 20, 2009

யுனிவர்சிட்டியில ஃபர்ஸ்ட் வர்றதுக்கு


web counter


யுனிவர்சிட்டியில் ஃபர்ஸ்ட் வர்றதுக்கு முன் இதற்கு
விடையை சொல்லுங்க....


Check out your lateral thinking power!

The first 4 images are the questions and the last four the answers.

Please do not look at the answers first, these are really good, try it out











ANSWERS

* The last one took the basket with the egg in it.

* The rest were women

* Pour the second into the fifth

* He lived in a lighthouse

நீங்க சரியாகதான் சொல்லியிருப்பீங்க...சரி இப்ப
யுனிவர்சிட்டியில ஃபர்ஸ்ட் வர்றதுக்கான டிப்ஸ் தரேன்
படிச்சுக்குங்க:-

விடியற்காலையில 3 .30 மணியிலிருந்து 4 மணிக்கு
எழுந்து பிரஷ் பண்ணிட்டு,குளிராக இருந்தாலும்
பரவாயில்லையின்னு குளிச்சிட்டு வாங்க. அதுக்குள்ள
மணி 4.30 லிருந்து 5 ஆகிவிடும். அம்மாவை எழுப்பி
காப்பியோ - டீயோ போட்டுதரச்சொல்லி குடிங்க.
5.30 மணிக்கு கிளம்பி நேரா யுனிவர்சிட்டிக்கு
போயிடுங்க...அப்புறம் பாருங்க...

அன்னைக்கு நீங்கதான் யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட் ஓ.கே.
மற்றவர்களுக்கு ஃபர்ஸ்ட் பிளேசை விட்டுகொடுக்கா
தீங்க.....


நன்றி,

அலாரவல்லி...

Monday, November 9, 2009

சுலபமாக கோலம் போடுவது எப்படி?



இன்று வித்தியாசமான ஒரு பதிவு போடலாம் என
நினைத்தேன்...இலங்கையில் சீதாபிராட்டியார்
இராமனை நினைத்து இந்த கோலத்தை போட்டதாக
சொல்வார்கள். மனம் சஞ்சலப்படும் சமயம் நமது
மனதை நேர்முகப்படுத்த இந்த கோலம் பயன்படும்.
போடுவதும் மிக சுலபம். இனி இதை போடுவதைப்
பற்றி பார்க்கலாம்.

முதலில் நடுவில் ஒரு புள்ளியை வைத்து அதன்
மேல்புறம் கீழ்புறம் மற்றும் வலப்புறம் இடப்புறம்
என ஐந்து ஐந்து புள்ளிகளை வைக்கவும். கீழே
பாருங்கள்.

அதன் குறுக்கே இதுபோல் மேலும் புள்ளிகள் வைத்துக்
கொள்ளுங்கள்.


இறுதியாக உங்களுக்கு இதுபோல் படம் வரும்.


இப்போது இதில் ஏதாவது ஒரு புள்ளியை எடுத்துக்
கொண்டுஅதில் முறையே 1-3-5-மற்றும் 2-4 மீண்டும்
1-3-5 என ஓவ்வொரு வரிசையிலும் போட்டுக்
கொள்ளுங்கள்.கீழேஉள்ள படத்தை பாருங்கள்.


மேலே உள்ள படத்தில் முதலில் 1 என்கின்ற
எண்ணில் ஆரம்பித்துஅடுத்த வரியில் 3 வது
புள்ளியையும் அதற்கு அடுத்த வரியில்
5வது புள்ளியும் அதற்கு அடுத்த வரியில் 2
வது புள்ளியையும் அதற்கு அடுத்த வரியில் 4
வது புள்ளியையும் மீண்டும் அதற்கு அடுத்த
வரியில் முதல் பு்ள்ளியையும் கடிகார சுற்று
திசையில் குறித்துஉள்ளேன்.

இப்போது முதலில் 1 ஆரம்பித்து அடுத்துள்ள 3
ஆம் எண்ணுக்குகோட்டினை இழுங்கள்.
அடுத்து 5 ஆம் எண்ணுக்கு கோட்டினை
இழு்ங்கள். அடுத்து 2 அடுத்து 4 மீண்டும் 1
அடுத்து 3 அடுத்து5 எனஅடுத்தடுத்த வரிகளில்
உள்ள புள்ளிகளை இணைத்துக்கொண்டு
வாருங்கள். இறுதியில் உங்களுக்கு கீழ்கண்ட
கோலம் அழகாக வரும்.

இறுதியில் அதன் ஓரங்களில் பஇதயக்கமலம் என்று
குறிப்பிடுங்கள்.கீழே உள்ள படத்தினை பாருங்கள்.


மனம் குழப்பமாகவும் சோர்வாகவும் இருக்கும் சமயம்
இந்தகோலம் போட்டுபார்த்தால் மனமும் உடலும்
சுறுசுறுப்பாகும்.

அன்புடன்,

அலாரவல்லி.



Wednesday, November 4, 2009

ஐந்தாவது பெண்ணின் பெயர் என்ன?












ஓரு சின்ன புதிர்:-

ஒருவருக்கு மொத்தம் 5 பெண்கள். அவர்களின் பெயர் முறையே

NANA, NUNA, NINA,NENA.......


அப்படியானால் ஐந்தாவது பெண்ணின் பெயர் என்ன?

கருத்தில் சொல்லுங்கள்.

நன்றி

அலாரவல்லி.

Tuesday, October 27, 2009

உங்களுக்கான நியுராலஜிக்கல் சோதனை எளிதில் செய்ய



MUST Try



This is a REAL neurological test. Sit comfortably.
.


1- Find the C below. Do not use any cursor help.


OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOCOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO



2- If you already found the C, now find the 6 below.


9999999999999999999999999999999999999999999999999999999999999999

9999999999999999999999999999999999999999999999999999999999999999999

9999999999999999999999999999999999999999999999999999999999999999999

9999699999999999999999999999999999999999999999999999999999999999999

9999999999999999999999999999999999999999999999999999999999999999999

9999999999999999999999999999999999999999999999999999999999999999



3- Now find the N below. It's a little more difficult..


MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMNMMMM
MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM
MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM
MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM
MMMMMMMMMMMMMMMMMMM



This is NOT a joke.
If you were able to pass these 3 tests, you can cancel your annual visit to your neurologist.
Your brain is great and you're far from having Alzheimer Disease. Pass it on to all your friends that have laughingly said "I have Alzheimer's"

Thank goodness I found all three!!



அன்புடன்,

அலாரவல்லி...

தகவல் உதவி்- என்னுடைய குரு திரு.ஜெய்காந்த் அவர்கள்.

Friday, October 16, 2009

பட்டாசு வெடிக்கும் சமயம்.

இன்று தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் எனது
இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.



தீபாவளி கொண்டாடும் சிறுவர்கள் பாதுகாப்பான
வழிகளில் தீபாவளியை கொண்டாடவேண்டும்.

சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் சமயம் பெரியவர்கள்
அருகில் இருந்து கவனிக்க வேண்டும்.

சமையல் அறை அருகில் பட்டாசு வெடிக்ககூடாது.

அதைப்போல் பட்டாசு ஈரமாக இருக்கின்றது என
அடுப்பின் அருகே காய வைக்ககூடாது.

பட்டாசு கொளுத்தியவுடன் அதுவெடிக்கவில்லையென்றால்
அதை கையில் எடுத்துப்பார்ப்பது தவறு.சமயத்தில் அது
வெடிக்கலாம்.

சங்குசக்கரம்,பூத்தொட்டி,பென்சில் போன்றவை சமயத்தில்
வெடிக்கும் அபாயம் உண்டு்.எனவே அதை கவனமாக
கையாளுங்கள்.

கம்பி மாத்தாப்பு கொளுத்தி முடித்ததும் வாளி தண்ணீரில்
அதை போட்டுவிடவும்.

முடிந்தவரை பருத்தி ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிக்கவும்

நன்றி....

மீண்டும் சந்திப்போம்.

அலாரவல்லி.

Thursday, October 15, 2009

அலாரவல்லி:-லட்சுமி அபிஷேகம் சுலபமாக செய்ய

இன்று தீபாவளித்திருநாள். இன்றைய நல்லநாளில் லட்சுமி
பூஜை செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் நமக்கு கிடைக்கும்.
இந்த பூஜை செய்வது மிக சுலபம். இந்த பூஜைக்கான
பொருட்களை வாங்க இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

முதலில் உள்ள வினாயகரை மவுஸ் மூலம் எடுத்து தாம்பாளத்தில்
வையுங்கள்.

இப்போது வட்டமிட்டுள்ள இடத்தில் இதில் உள்ள சின்ன
பாத்திரத்தை மவுசால் எடுத்து வையுங்கள்.


அபிஷேகங்கள் முடிந்ததும் பிள்ளையாரை எடுத்து மனையில்
வையுங்கள்.

அடுத்து மனையில் அரிசி யை வைத்து பின்
கலசத்தை எடுத்துவைத்து பின்னர் முறையே மாவிலை-
தேங்காய் எடுத்துவையுங்கள்.

அடுத்துள்ள அம்மன் சிலையெடுத்து வைத்து அதைப்போலவே
அபிஷேகங்கள் செய்யுங்கள்.

இறுதியில் தீபங்கள் கொளுத்தி ஆராதனை செய்யுங்கள்.

அபிஷேக ஆராதனை செய்யுங்கள். அம்மன் அருள் பெருங்கள்.


எனது முதல்பதிவில் ஆதரவு கொடுத்து ஓட்டுப்போட்ட
அன்பு நெஞ்சங்கள் பதினைந்து பேருக்கும் மனமார்ந்த நன்றி!


 
Copyright 2009 அலாரவல்லி. Powered by Blogger
Blogger Templates created by Deluxe Templates
Wordpress by Wpthemesfree