உயில் எழுதுவது எப்படி ?
மனிதனாக பிறந்த ஒவ்வொருவனுக்கும் இறப்பு உறுதி.
அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் ஒரு நாள்
இறந்துதான் ஆகவேண்டும். நீங்கள்
இன்ஸ்சுரன்ஸ் எடுத்து வைத்து இருக்கலாம். அதன்மூலம்
நமக்கு பின் நமது குடும்பத்தார்க்கு பணம் கிடைக்கும்.
அதுபோல்நாம் சேர்த்த பணம்-அசையும் சொத்து-
அசையா சொத்து ஆகியவற்றையும் நாம் விரும்பியவர்க்கு
- நம்மை விரும்பியவர்களுக்கு
உயில் எழுதிவைத்துவிட்டால் பிரச்சனையில்லை.
உயில் என்பதை மரண சாசனம் என்றும், இறப்புறுதி
ஆவணம் என்றும் சொல்வார்கள் .யார் வேண்டு
மானாலும் உயில் எழுதலாம்.உயில் பதிவு செய்யப்பட
வேண்டும் என்பது கட்டாயமல்ல .
பதிவு செய்யாமலும் உயில் பிறப்பிக்கபடலாம்.
உயில் பத்திரத்தில்( முத்திரை தாளில் ) எழுத
வேண்டியதில்லை .வெள்ளை தாளிலும் எழுதலாம் .
இதை உயில் எழுதுபவர் தன்னிடமோ அல்லது
தனது குடும்பத்தினரிடமோ அல்லது நண்பரிடமோ
கொடுத்து வைக்கலாம் .ரகசியமாக இருக்க வேண்டும்
என்று நினைத்தாள் பத்திரப்பதிவு அலுவலகத்தில்
பாதுகாப்பாக வைத்திருக்க கட்டணம் செலுத்தி
பதிவு செய்யலாம் .
உயில் ஒரு பக்கத்திற்கு மேல் எழுதி
இருந்தால் உயிலை எழுதியவர் ஒவ்வொரு
பக்கத்திலும் கையெழுத்து போட வேண்டும்.
அல்லது கைரேகை வைக்க வேண்டும். உயில்
எழுதியவர் உயிலில் கையெழுத்து போடும்
பொழுது இரண்டு சாட்சிகளாவது இருக்க வேண்டும்.
இரண்டு சாட்சிகளும் சாட்சிக் கையெழுத்து போட
வேண்டும். ஒரு உயிலில் சாட்சியாக கையெழுத்து
போடுபவருக்கு அந்த உயிலின் மூலம் சொத்து
கிடைக்கும் என்று எழுதியிருந்தால் அந்த சாட்சிக்கு
அந்த சொத்து கிடைக்காது.
உயில் எழுதுபவரின் உடைமைகளைபற்றி
மட்டுமே உயில் எழுத முடியும்.உயிலில்
எழுதப்படும் சொத்து உயில் எழுதுபவரின்
உரிமையாக இருக்க வேண்டும்.
உயில் எழுதுபவர் தனது ஆயுள் காலத்தில் ,
அந்த உயிலை ரத்து செய்து விடலாம்.,அல்லது
அந்த உயிலை மாற்றி அமைக்கலாம்.
உயில் நாம் எழுதினாலும் நமது உயிர் சென்றபின்னர்தான்
அந்த உயிலுக்கு உயிர் வரும்.
தவறாக எழுதப்பட்ட உயில் என்றோ - வற்புறுத்தி எழுதபபட்ட
உயில் என்றோ - உயிலில் இருப்பது கள்ளக் கையெழுத்து
என்றோ -உயில் எழுதியவர் உயில் எழுதிய காலத்தில்
மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றாலோ - அந்த உயிலை
எதிர்த்து நீதிமன்றத்தில் வழுக்கு போடமுடியும்.
நானே அன்றாடம் காய்ச்சி - எனக்கு ஏது சொத்து -
என்கின்றீர்களா...நாளையே உங்களுக்கு சொத்து
சேரும் சமயம் இது உதவலாம்....
1 comments:
சொத்து சேர்ப்பதற்கு முன்பே உயிலை பத்தி யோசிப்பது நமக்கே ஓவரா தெரியல ?
மிகவும் தேவையான பதிவு - சொத்து வச்சிருப்பவர்களுக்கு ....
Post a Comment