நினைத்தேன்...இலங்கையில் சீதாபிராட்டியார்
இராமனை நினைத்து இந்த கோலத்தை போட்டதாக
சொல்வார்கள். மனம் சஞ்சலப்படும் சமயம் நமது
மனதை நேர்முகப்படுத்த இந்த கோலம் பயன்படும்.
போடுவதும் மிக சுலபம். இனி இதை போடுவதைப்
பற்றி பார்க்கலாம்.
முதலில் நடுவில் ஒரு புள்ளியை வைத்து அதன்
மேல்புறம் கீழ்புறம் மற்றும் வலப்புறம் இடப்புறம்
என ஐந்து ஐந்து புள்ளிகளை வைக்கவும். கீழே
பாருங்கள்.
அதன் குறுக்கே இதுபோல் மேலும் புள்ளிகள் வைத்துக்
கொள்ளுங்கள்.
இறுதியாக உங்களுக்கு இதுபோல் படம் வரும்.
இப்போது இதில் ஏதாவது ஒரு புள்ளியை எடுத்துக்
கொண்டுஅதில் முறையே 1-3-5-மற்றும் 2-4 மீண்டும்
1-3-5 என ஓவ்வொரு வரிசையிலும் போட்டுக்
கொள்ளுங்கள்.கீழேஉள்ள படத்தை பாருங்கள்.
மேலே உள்ள படத்தில் முதலில் 1 என்கின்ற
எண்ணில் ஆரம்பித்துஅடுத்த வரியில் 3 வது
புள்ளியையும் அதற்கு அடுத்த வரியில்
5வது புள்ளியும் அதற்கு அடுத்த வரியில் 2
வது புள்ளியையும் அதற்கு அடுத்த வரியில் 4
வது புள்ளியையும் மீண்டும் அதற்கு அடுத்த
வரியில் முதல் பு்ள்ளியையும் கடிகார சுற்று
திசையில் குறித்துஉள்ளேன்.
இப்போது முதலில் 1 ஆரம்பித்து அடுத்துள்ள 3
ஆம் எண்ணுக்குகோட்டினை இழுங்கள்.
அடுத்து 5 ஆம் எண்ணுக்கு கோட்டினை
இழு்ங்கள். அடுத்து 2 அடுத்து 4 மீண்டும் 1
அடுத்து 3 அடுத்து5 எனஅடுத்தடுத்த வரிகளில்
உள்ள புள்ளிகளை இணைத்துக்கொண்டு
வாருங்கள். இறுதியில் உங்களுக்கு கீழ்கண்ட
கோலம் அழகாக வரும்.
இறுதியில் அதன் ஓரங்களில் பஇதயக்கமலம் என்று
குறிப்பிடுங்கள்.கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
மனம் குழப்பமாகவும் சோர்வாகவும் இருக்கும் சமயம்
இந்தகோலம் போட்டுபார்த்தால் மனமும் உடலும்
சுறுசுறுப்பாகும்.
அன்புடன்,
அலாரவல்லி.
0 comments:
Post a Comment