Sunday, November 29, 2009

உயில் எழுதுவது எப்படி ?


web counter

உயில் எழுதுவது எப்படி ?
மனிதனாக பிறந்த ஒவ்வொருவனுக்கும் இறப்பு உறுதி.
அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் ஒரு நாள்
இறந்துதான் ஆகவேண்டும். நீங்கள்
இன்ஸ்சுரன்ஸ் எடுத்து வைத்து இருக்கலாம். அதன்மூலம்
நமக்கு பின் நமது குடும்பத்தார்க்கு பணம் கிடைக்கும்.
அதுபோல்நாம் சேர்த்த பணம்-அசையும் சொத்து-
அசையா சொத்து ஆகியவற்றையும் நாம் விரும்பியவர்க்கு
- நம்மை விரும்பியவர்களுக்கு
உயில் எழுதிவைத்துவிட்டால் பிரச்சனையில்லை.
உயில் என்பதை மரண சாசனம் என்றும், இறப்புறுதி
ஆவணம் என்றும் சொல்வார்கள் .யார் வேண்டு
மானாலும் உயில் எழுதலாம்.உயில் பதிவு செய்யப்பட
வேண்டும் என்பது கட்டாயமல்ல .
பதிவு செய்யாமலும் உயில் பிறப்பிக்கபடலாம்.
உயில் பத்திரத்தில்( முத்திரை தாளில் ) எழுத
வேண்டியதில்லை .வெள்ளை தாளிலும் எழுதலாம் .
இதை உயில் எழுதுபவர் தன்னிடமோ அல்லது
தனது குடும்பத்தினரிடமோ அல்லது நண்பரிடமோ
கொடுத்து வைக்கலாம் .ரகசியமாக இருக்க வேண்டும்
என்று நினைத்தாள் பத்திரப்பதிவு அலுவலகத்தில்
பாதுகாப்பாக வைத்திருக்க கட்டணம் செலுத்தி
பதிவு செய்யலாம் .
உயில் ஒரு பக்கத்திற்கு மேல் எழுதி
இருந்தால் உயிலை எழுதியவர் ஒவ்வொரு
பக்கத்திலும் கையெழுத்து போட வேண்டும்.
அல்லது கைரேகை வைக்க வேண்டும். உயில்
எழுதியவர் உயிலில் கையெழுத்து போடும்
பொழுது இரண்டு சாட்சிகளாவது இருக்க வேண்டும்.
இரண்டு சாட்சிகளும் சாட்சிக் கையெழுத்து போட
வேண்டும். ஒரு உயிலில் சாட்சியாக கையெழுத்து
போடுபவருக்கு அந்த உயிலின் மூலம் சொத்து
கிடைக்கும் என்று எழுதியிருந்தால் அந்த சாட்சிக்கு
அந்த சொத்து கிடைக்காது.
உயில் எழுதுபவரின் உடைமைகளைபற்றி
மட்டுமே உயில் எழுத முடியும்.உயிலில்
எழுதப்படும் சொத்து உயில் எழுதுபவரின்
உரிமையாக இருக்க வேண்டும்.
உயில் எழுதுபவர் தனது ஆயுள் காலத்தில் ,
அந்த உயிலை ரத்து செய்து விடலாம்.,அல்லது
அந்த உயிலை மாற்றி அமைக்கலாம்.
உயில் நாம் எழுதினாலும் நமது உயிர் சென்றபின்னர்தான்
அந்த உயிலுக்கு உயிர் வரும்.
தவறாக எழுதப்பட்ட உயில் என்றோ - வற்புறுத்தி எழுதபபட்ட
உயில் என்றோ - உயிலில் இருப்பது கள்ளக் கையெழுத்து
என்றோ -உயில் எழுதியவர் உயில் எழுதிய காலத்தில்
மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றாலோ - அந்த உயிலை
எதிர்த்து நீதிமன்றத்தில் வழுக்கு போடமுடியும்.
நானே அன்றாடம் காய்ச்சி - எனக்கு ஏது சொத்து -
என்கின்றீர்களா...நாளையே உங்களுக்கு சொத்து
சேரும் சமயம் இது உதவலாம்....

Friday, November 20, 2009

யுனிவர்சிட்டியில ஃபர்ஸ்ட் வர்றதுக்கு


web counter


யுனிவர்சிட்டியில் ஃபர்ஸ்ட் வர்றதுக்கு முன் இதற்கு
விடையை சொல்லுங்க....


Check out your lateral thinking power!

The first 4 images are the questions and the last four the answers.

Please do not look at the answers first, these are really good, try it outANSWERS

* The last one took the basket with the egg in it.

* The rest were women

* Pour the second into the fifth

* He lived in a lighthouse

நீங்க சரியாகதான் சொல்லியிருப்பீங்க...சரி இப்ப
யுனிவர்சிட்டியில ஃபர்ஸ்ட் வர்றதுக்கான டிப்ஸ் தரேன்
படிச்சுக்குங்க:-

விடியற்காலையில 3 .30 மணியிலிருந்து 4 மணிக்கு
எழுந்து பிரஷ் பண்ணிட்டு,குளிராக இருந்தாலும்
பரவாயில்லையின்னு குளிச்சிட்டு வாங்க. அதுக்குள்ள
மணி 4.30 லிருந்து 5 ஆகிவிடும். அம்மாவை எழுப்பி
காப்பியோ - டீயோ போட்டுதரச்சொல்லி குடிங்க.
5.30 மணிக்கு கிளம்பி நேரா யுனிவர்சிட்டிக்கு
போயிடுங்க...அப்புறம் பாருங்க...

அன்னைக்கு நீங்கதான் யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட் ஓ.கே.
மற்றவர்களுக்கு ஃபர்ஸ்ட் பிளேசை விட்டுகொடுக்கா
தீங்க.....


நன்றி,

அலாரவல்லி...

Monday, November 9, 2009

சுலபமாக கோலம் போடுவது எப்படி?இன்று வித்தியாசமான ஒரு பதிவு போடலாம் என
நினைத்தேன்...இலங்கையில் சீதாபிராட்டியார்
இராமனை நினைத்து இந்த கோலத்தை போட்டதாக
சொல்வார்கள். மனம் சஞ்சலப்படும் சமயம் நமது
மனதை நேர்முகப்படுத்த இந்த கோலம் பயன்படும்.
போடுவதும் மிக சுலபம். இனி இதை போடுவதைப்
பற்றி பார்க்கலாம்.

முதலில் நடுவில் ஒரு புள்ளியை வைத்து அதன்
மேல்புறம் கீழ்புறம் மற்றும் வலப்புறம் இடப்புறம்
என ஐந்து ஐந்து புள்ளிகளை வைக்கவும். கீழே
பாருங்கள்.

அதன் குறுக்கே இதுபோல் மேலும் புள்ளிகள் வைத்துக்
கொள்ளுங்கள்.


இறுதியாக உங்களுக்கு இதுபோல் படம் வரும்.


இப்போது இதில் ஏதாவது ஒரு புள்ளியை எடுத்துக்
கொண்டுஅதில் முறையே 1-3-5-மற்றும் 2-4 மீண்டும்
1-3-5 என ஓவ்வொரு வரிசையிலும் போட்டுக்
கொள்ளுங்கள்.கீழேஉள்ள படத்தை பாருங்கள்.


மேலே உள்ள படத்தில் முதலில் 1 என்கின்ற
எண்ணில் ஆரம்பித்துஅடுத்த வரியில் 3 வது
புள்ளியையும் அதற்கு அடுத்த வரியில்
5வது புள்ளியும் அதற்கு அடுத்த வரியில் 2
வது புள்ளியையும் அதற்கு அடுத்த வரியில் 4
வது புள்ளியையும் மீண்டும் அதற்கு அடுத்த
வரியில் முதல் பு்ள்ளியையும் கடிகார சுற்று
திசையில் குறித்துஉள்ளேன்.

இப்போது முதலில் 1 ஆரம்பித்து அடுத்துள்ள 3
ஆம் எண்ணுக்குகோட்டினை இழுங்கள்.
அடுத்து 5 ஆம் எண்ணுக்கு கோட்டினை
இழு்ங்கள். அடுத்து 2 அடுத்து 4 மீண்டும் 1
அடுத்து 3 அடுத்து5 எனஅடுத்தடுத்த வரிகளில்
உள்ள புள்ளிகளை இணைத்துக்கொண்டு
வாருங்கள். இறுதியில் உங்களுக்கு கீழ்கண்ட
கோலம் அழகாக வரும்.

இறுதியில் அதன் ஓரங்களில் பஇதயக்கமலம் என்று
குறிப்பிடுங்கள்.கீழே உள்ள படத்தினை பாருங்கள்.


மனம் குழப்பமாகவும் சோர்வாகவும் இருக்கும் சமயம்
இந்தகோலம் போட்டுபார்த்தால் மனமும் உடலும்
சுறுசுறுப்பாகும்.

அன்புடன்,

அலாரவல்லி.Wednesday, November 4, 2009

ஐந்தாவது பெண்ணின் பெயர் என்ன?
ஓரு சின்ன புதிர்:-

ஒருவருக்கு மொத்தம் 5 பெண்கள். அவர்களின் பெயர் முறையே

NANA, NUNA, NINA,NENA.......


அப்படியானால் ஐந்தாவது பெண்ணின் பெயர் என்ன?

கருத்தில் சொல்லுங்கள்.

நன்றி

அலாரவல்லி.
 
Copyright 2009 அலாரவல்லி. Powered by Blogger
Blogger Templates created by Deluxe Templates
Wordpress by Wpthemesfree