Wednesday, April 14, 2010

கேரட்:- பயன்பாடுகள்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எங்கே ஆளையே காணோம் என்று பார்த்தீர்களா...என்ன செய்வது..இப்போதுதான் விடுமுறை விட்டார்கள். இனி லீவு முடியும் வரை அடிக்கடி சந்திக்கின்றேன். இன்றைய பதிவாக கேரட் பற்றி பார்க்கலாம்.
வெளிநாட்டு காய்கறி என்றாலும் கேரட்டுக்கு உள்ள மதிப்பே தனிதான். அதில் இல்லாத சத்துக்கள் இல்லை எனலாம். கண் நன்றாக தெரிய தினம ்ஒரு கேரட் சாப்பிட சொல்லுவார்கள். அந்த கேரட் பற்றி இன்று தெரிந்துகொள்ளலாம்.பிறந்த போது இதற்கு வைத்தபெயர் டாகஸ் கரோட்டா. பிரன்ச் பெயரான கரோட்டியில் இருந்து வந்தது. ஆப்கானிஸ்தான் இதன் பிறந்த இடம் என்று சொல்லுவார்கள்.ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் வரும்  நான் அப்படியே சாப்பிடுவேன் என்று அதுபோல கேரட்டை அப்படியே சாப்பிடலாம். சமையல் செய்தும் சாப்பிடலாம்.
பயணங்களின் போது உடன் கொண்டுசென்று அப்படியே சாப்பிடலாம்.கேரட்டை நன்கு கழுவி துருவி உடன் மிளகாய் - வெங்காயம் - உப்பு -எலும்மிச்சம் பழம் சேர்த்துசாப்பிட சுவை அருமையாக இருக்கும்.பீட்டா கரோட்டின் என்கின்ற மருத்துவ சத்து உடலில் எதிர்ப்பு சத்தியை தருவதோடு இல்லாமல் நுரையிரல் புற்றுநோய் வராமல் தடுக்கின்றது:.(நுரையிரல் புற்றுநோய் யாருக்கு வரும் என்று நினைக்கின்றீர்களா - அடிக்கடி புகைப்பிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்று நோய் வரும்) கேரட்டுடன் பால் சேர்த்து ஜீஸாக சாப்பிடலாம்.கேரட் அல்வா எப்படி செய்வது என்று அக்கா பதிவிட்டுள்ளார்கள். இங்கு சென்று
அதைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்,
அலாரவல்லி.
 
Copyright 2009 அலாரவல்லி. Powered by Blogger
Blogger Templates created by Deluxe Templates
Wordpress by Wpthemesfree