Thursday, January 21, 2010

நீங்கள் துப்பறியும் நிபுணரா என சுய பரிசோதனை செய்ய


web counter


நீங்கள் துப்பறியும் நிபுணரா என சுய பரிசோதனை செய்ய
இரண்டு தகவல்களை இணைத்துள்ளேன். உங்கள் விடை
களை சொல்லுங்கள் பார்க்கலாம்.


1.   02.10.2009 வெள்ளிக்கிழமை.காலை 10.30 -12.00 .ராகுகாலம்
முடிந்த சிறிது நேரத்திற்கு எல்லாம் சென்னையில் (அசோக் நகர்
 என்று வைத்து கொள்ளுங்களேன்)உள்ள ஒரு வீட்டில் இருக்கும்
நபர் கொலைசெய்யப்பட்டு உள்ளார்.போலீஸ் வருகின்றது.
முதலில் அவரின் மனைவியை விசாரிக்கின்றது.
நான் அந்த நேரம் . உறக்கிக்கொண்டிருந்தேன் என பதில்
அளிக்கின்றார்.
அடுதது அவரின் மகனை விசாரிக்கின்றார்.அவன் நான்
எனது நண்பனுடன் பக்கத்து மைதானத்தில் விளையாடிக்
கொண்டிருந்ததாக சொல்கின்றார்.
அடுத்து அவரின் மகளை விசாரிக்கின்றார். நான் அந்த
நேரம் கம்யூட்டரில் சாட்டிங்கில இருந்ததாக தெரிவிக்கின்றார்.
அடுத்து அவரின் வேலைகாரனை விசாரிக்கின்றார்.
அவர் ஓயின் ஷாப் போயிருந்ததாக சொல்கின்றார்.
அடுத்து அவரின் தோட்டக்காரனை விசாரிககின்றார்.
தோட்டக்காரர் காய்கறிகளை மார்க்கெட்டில் கொடுத்துவிட்டு
வர போயிருந்ததாக சொல்கின்றார்.
சமையல் காரரை விசாரிக்கின்றார். அவர் சமையல்
செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கின்றார்.
பக்கத்து வீட்டில் விசாரிக்கின்றார். அவர்கள் வெளியில்
ஷாப்பிங் சென்றதாக சொல்கின்றார்கள்.
அனைவரையும் விசாரித்த காவல் அதிகாரி இறுதியில்
கொலையாளியை கைது செய்கின்றார்....


அவர் யார்?.........


அடுத்த கேள்வி:-


ஒரு மாஜிஸ்ட்ரேட்...
.அவருடைய மகன் வக்கிலாக உள்ளார்.
வக்கிலின் தந்தை ஒரு போலீஸ் அதிகாரி.
அப்படியானால் மாஜிஸ்ட்ரேட்டுக்கு அந்த
போலீஸ் அதிகாரி என்ன வேண:டும்...


உங்களுக்கு தெரிந்த விடைகளை சொல்லுங்கள்.


நாளை இந்த நேரம் சரியான விடை சொல்கின்றேன்.


நன்றியுடன்,
அலாரவல்லி.
.
எனது முந்தைய பதிவான வெளிநாடுகளில் நேரத்தை அறிய
என்கின்ற பதிவை குட்பிளாக்ஸ் பதிவில் வெளியிட்ட
யூத்புல் விகடனுக்கு நன்றி...

Monday, January 11, 2010

வெளிநாடுகளின் நேரத்தை சுலபமாக அறிந்துகொள்ள



web counterவது பார்வையாளராக வருகைதந்துள்ள
 உங்களுக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

பணியின் காரணமாக நாம் அனைவரும் வெவ்வேறு
இடங்களில் இருக்கின்றோம். அதைப்போல் நமக்கு
வேண்டியவர்களும் வெவ்வேறு இடங்களில் உள்ளனர்.
அவ்வாறு இருப்பவர்களின் நாடுகளில் இப்போதைய
நேரம் என்ன - அவர்கள் இன்நேரம் பணியில் இருப்பார்களா -
உறங்கிக் கொண்டிருப்பார்களா - என இந்த கெடிகாரம்
மூலம் எளிதில் கண்டு கொள்ளலாம். இதை டவுண்லோடு
செய்து கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்ததும் நமக்கு
டாக்ஸ்பாரில் கடிகாரத்துடன் சிம்பள் வந்துவிடும்.
அதை கிளிக் செய்தால் உங்களுக்கு இந்த படம் வரும்.


கர்சரை உங்களுக்கு தேவைப்படும் நாட்டுக்கு எடுத்து சென்றால்
அந்த நாட்டுடைய பெயர் - அந்த நாட்டுடைய நேரம் -
 நாள் -கிழமை எல்லாம் தெரியும்.இதன் கொள்ளளவு
240 கே.பி.தான். பாருங்கள். இதை பதிவிறக்க இங்கு
செல்லுங்கள். பதிவிறக்கம் செய்யும் முன் மறக்காமல் ஒட்டை
போடுங்கள்.

நன்றி

அலாரவல்லி.

Tuesday, January 5, 2010

உங்க வில்-பவர் எப்படி என சுலபமாக அறிந்துகொள்ள


web counter




பொறுமை - சகிப்பு - சாதிப்பு என உங்கள் வில்பவர் எப்படி என சுலபமாக அறிந்து கொள்ளலாம். கீழே கொடுத்துள்ள 25 கேள்விகளுக்கு நீங்கள் Yes or No கிளிக் செய்தால் போதும். இறுதியல் உள்ள இங்கே அழுத்து கிளிக் செய்தால் உங்களுடைய Yes or No எத்தனை என்கின்ற விடை வரும். அதற்கான பலன்கள் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துக்கொள்ளுங்கள். கேள்விகளை ஆரம்பிக்கலாமா?
கேள்வி எண் 01 பொன்-நகையை விட புன்னகையே சிறந்தது என நீங்கள் கருதுவீர்கள். Yes No Cannot Say
கேள்வி எண் 02எந்த சூழ்நிலையிலும் உங்களுக்கு சலிப்பே வராது Yes No CannotSay
கேள்வி எண் 03எந்த சூழ்நிலையிலும் அவசரம் காட்ட மாட்டீர்கள் Yes No CannotSay
கேள்வி எண் 04எதிலும் எப்போதும் வெற்றி தான் உங்கள் இலக்கு.எத்தனை முறை தோல்வி வந்தாலும் துவளமாட்டீர்கள். Yes No CannotSay
கேள்வி எண் 05எத்தனை தோல்வி வந்தாலும் போராடுவீர்கள் Yes No CannotSay
கேள்வி எண் 06நம்பிக்கையில் இருந்து பின் வாங்க மாட்டீர்கள். Yes No CannotSay
கேள்வி எண் 07சென்டிமென்ட் சடங்கு மீது நம்பிக்கை இல்லை Yes No CannotSay
கேள்வி எண் 08நெருக்கமாக பழகினால் முழுமையாக பழகுவீர்கள். Yes No CannotSay
கேள்வி எண் 09பொதுவாக அமையானவர்-அழுத்தமானவர் என பெயர் உண்டு Yes No CannotSay
கேள்வி எண் 10சரி என்று மனதில் பட்டதை செய்வீர்கள் Yes No CannotSay
கேள்வி எண் 11சரியில்லை என்றாலும் பொறுத்துக்கொள்வீர்கள் Yes No CannotSay
கேள்வி எண் 12சரிபடுத்த காலம் பார்த்து செய்வீர்கள் Yes No CannotSay
கேள்வி எண் 13அடுத்தவர் புகழ்ச்சிக்கு மயங்க மாட்டீர்கள் Yes No CannotSay
கேள்வி எண் 14என்ன விமர்சனம் வந்தாலும் ஒரு சிரிப்பே உங்கள் பதில். Yes No CannotSay
கேள்வி எண் 15அளவிற்கு அதிகமாக சகிப்புத்தன்மை உங்களுக்கு உண்டு Yes No CannotSay
கேள்வி எண் 16கணவர் கோபப்பட்டாலும் பொறுமை உங்களிடம் உண்டு Yes No CannotSay
கேள்வி எண் 17எளிதில் யாரையும் நம்ப மாட்டீர்கள். Yes No CannotSay
கேள்வி எண் 18எடுத்த காரியத்தில் முழு அக்கறை காட்டுவீர்கள். Yes No CannotSay
கேள்வி எண் 19அவ பாதி ஆம்பிளை என உங்கள் மீது அபிப்ராயம் இருக்கும். Yes No CannotSay
கேள்வி எண் 20நெருங்கி பழகிவிட்டால் உதற முடியாமல்தவிப்பீர்கள் Yes No CannotSay
கேள்வி எண் 21மனதில் போட்டுக்கொண்டாலும் புலப்ப மாட்டீர்கள் Yes No CannotSay
கேள்வி எண் 22காரணமின்றி சட்டென்று கோபம் வராது Yes No CannotSay
கேள்வி எண் 23கோபம் வந்தால் செய்கையில் தான் காட்டுவீர்கள். Yes No CannotSay
கேள்வி எண் 24பொதுவாக யாரிடமும் வலிய போய் பேச மாட்டீர்கள் Yes No CannotSay
கேள்வி எண் 25எந்த சூழ்நிலையிலும் நிர்பந்தத்தை ஏற்க மாட்டீர்கள். Yes No CannotSay
இங்கே அழுத்தி உங்கள் Yes - No ரிசல்ட் பார்த்துவிட்டீர்களா?
இப்போது Yes மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்.
17 முதல் 25 வரை YES போட்டவர்களுக்கு:-
நீங்கள் ரொம்பவும் பொறுமைசாலி. சகிப்புத்தன்மை இருப்பதும்
அதிகம். கண்டிப்பாக சிலவற்றில் ஜெயித்து இருப்பீர்கள்.ஆனால்
அங்கீகாரம் கிடைக்காது. புத்திசாலியான நீங்கள் வாழ்க்கையில்
இடறினாலும் இடைஞ்சல்களை தாண்டி திருப்தி காண்பீர்கள்
காலம் உங்கள் கையில் யாரும் உங்களை பார்க்கும் காலம்
வரும். அதுவரை இந்த குணங்கள் தொடரட்டும். வெற்றி
மட்டுமல்ல திருப்தி. தோல்வியை எதிர்கொள்வதும்தான்.
அது உங்களிடம் நிறையவே உள்ளது.
கீப்-இட்-அப் - உங்கள் வில் பவர்.
7 முதல் 16 வரை YES போட்டவர்களுக்கு:-
சில விஷயங்களில் உங்கள் கணவரே ஆனாலும் உங்களால்
சகிக்க முடியலை என்பது புரிகின்றது. என்ன சண்டை
போட்டு முகத்தை தூக்கி வைக்துக்கொண்டு என்ன
சாகித்துவிட போகின்றீர்கள். முதல்ல கோபப்படற விஷயத்தை
விட்டுடுங்க. எந்த விஷயமானாலும் பாதி கிணறை தாண்டியதும்
பொசுக்குனு எரிச்சல்,கோபம், சகிப்புத்தன்மை வந்து 
காரியத்தை கெடுத்தடறீங்க. உங்களுக்கு வில்-பவர்
இருக்கு .முயற்சியை கை விடாதீங்க. 
1 முதல் 6 வரை YES போட்டவர்களுக்கு:-
அட மோசமான ஆளுங்க நீங்க. முதல்ல பொறுமை,
சகிப்புத்தன்மையை கத்துககுங்க. அதுதான் உங்கள்
வில்பவருக்கு முதல் படி. வெற்றி வருவதும் தோல்வி
வருவதும் மனிதர்கள் கையில் தான் உள்ளது:. உண்மையான
திருப்தி மனதில் தான் உள்ளது. அதுக்கு எதையும் தாங்கற
மனம் வேண்டும். சரி பார்த்துக்கலாம். ஒன்னும் பிரச்சனை
யில்லை என்கின்ற மனம் வேண்டும்.முதல்ல பொறாமை
ஆத்திரம் விட்டுவிட்டு பொறுமையை கடைபிடிங்க.
உங்கள் வில்பவர் தானே கூடும்.
நன்றி திரு.ஜெயகாந்த் அவர்கள்.
நன்றி
அலாரவல்லி..
 
Copyright 2009 அலாரவல்லி. Powered by Blogger
Blogger Templates created by Deluxe Templates
Wordpress by Wpthemesfree