Friday, October 16, 2009

பட்டாசு வெடிக்கும் சமயம்.

இன்று தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் எனது
இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.



தீபாவளி கொண்டாடும் சிறுவர்கள் பாதுகாப்பான
வழிகளில் தீபாவளியை கொண்டாடவேண்டும்.

சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் சமயம் பெரியவர்கள்
அருகில் இருந்து கவனிக்க வேண்டும்.

சமையல் அறை அருகில் பட்டாசு வெடிக்ககூடாது.

அதைப்போல் பட்டாசு ஈரமாக இருக்கின்றது என
அடுப்பின் அருகே காய வைக்ககூடாது.

பட்டாசு கொளுத்தியவுடன் அதுவெடிக்கவில்லையென்றால்
அதை கையில் எடுத்துப்பார்ப்பது தவறு.சமயத்தில் அது
வெடிக்கலாம்.

சங்குசக்கரம்,பூத்தொட்டி,பென்சில் போன்றவை சமயத்தில்
வெடிக்கும் அபாயம் உண்டு்.எனவே அதை கவனமாக
கையாளுங்கள்.

கம்பி மாத்தாப்பு கொளுத்தி முடித்ததும் வாளி தண்ணீரில்
அதை போட்டுவிடவும்.

முடிந்தவரை பருத்தி ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிக்கவும்

நன்றி....

மீண்டும் சந்திப்போம்.

அலாரவல்லி.

 
Copyright 2009 அலாரவல்லி. Powered by Blogger
Blogger Templates created by Deluxe Templates
Wordpress by Wpthemesfree